ஜெருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்: சங்கீதம் : 122 : 6
இஸ்ரேல் தலை நகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்காவுக்கு உலகநாடுகள் கண்டனம். நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏன்? ஜெருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளவேண்டும். ஏன் ? உலகநாடுகள் கண்டன குரல் எழுப்பவேண்டும். இதன் ஆரம்பம் தொன்றுதொட்டு இருக்கும் தொடர்கதை. அது பெருங்க்கதை. இப்போது வேண்டாம். 1948 இஸ்ரேல் பிரகடனத்திற்கு பின் முளைத்ததுதான் இந்த தீராத பிரச்சனையின் மூலகாரணம்.
இஸ்ரேல் தலையெடுத்த மறுகணமே அதன் தலையினை கொய்ந்துவிட கூட்டணி அமைத்து எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகள் போர்தொடுக்க, விளைவு ! மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசமானது. 1948 க்கு பிறகு மீண்டும் 1967 இல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகரமாக அறிவித்தது. இங்கே தான் பிரச்சனை. ஆகாத மருமகள் மண்சட்டி உடைத்தாலும் அது பொன் சட்டி அல்லவா, இதே கதை தான் இங்கும். பொதுவாக போரில் கைப்பற்றிய இடங்கள் கைப்பற்றிய நாட்டுக்கு சொந்தம், இது தான் உலக வழக்கம். இஸ்ரேலும் அதை தான் செய்தது. நாட்டாண்மைக்காரர்கள் பொருந்தாது என்கிறார்கள். ஆகவே உலகநாடுகளுக்கு ஒத்துபோகநினைத்து ஐக்கிய நாடுகள் சபையும் மல்லுக்கு நிற்கிறது. இந்த நாட்டாண்மைக்காரர்களின் தலையே நம்ப பெரியண்ணன் அமெரிக்காதான்.
இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களுள் ஒன்று யூத, இஸ்லாமியா மற்றும் கிறிஸ்துவர்களின் பொது இடம் என்பது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இம் மூன்று பிரிவினருக்கும் ஆபிரகாம் தகப்பன். சரி இது ஒருபுறம் இருக்கட்டும். மற்றோரு காரணமாக பார்க்கப்படுவது 3 00 000 பாலஸ்தீனியர்கள். இதிலும் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்த மூன்று லட்சம் பாலஸ்தீனியர்களும் இஸ்ரேல் குடிமக்களோ அல்லது ஜோர்டான் நாட்டு குடிமக்களோ இல்லை என்பதுதான். இவர்கள் நாடற்ற குடிகளாக இருந்தவர்கள். இப்போதும் அப்படியே தான் குடியுரிமை இல்லாதவர்களாக வாழுகிறார்கள். நம்ம ஊர் பழைய மொழி இதற்கு நன்றாகவே பொருந்தும் ” அடுத்தவர் வீட்டு நெய்யாம், தன் பெண்டாட்டி கையாம்” என்பது போல உலக நாடுகள் பஞ்சாயத்து செய்ய பார்க்கிறது. எதோ தம்பிரான் புண்ணியம் போல அமெரிக்க விழித்துக்கொண்டது அதன் அதிபரால்.
பாபு டீ தாமஸ்